கொழும்பிலிருந்து சென்ற தனியார் பேருந்து விபத்து! ஐவர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

விபத்து

கொழும்பிலிருந்து பதுளையை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தொன்று வீடொன்றின் மீது மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்து இன்றைய தினம் பண்டாரவளை – ஹல்துமுள்ளை நகரில் வைத்து இடம்பெற்றுள்ளதுடன் இதன்போது அந்த பேருந்தில் பயணம் செய்த பயணிகள் ஐவர் கடும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்களில் நான்கு பேர் தியத்தலாவை அரசினர் வைத்தியசாலையிலும், மற்றையவர் ஹல்துமுள்ளை அரசினர் வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பேருந்து மோதிய வீட்டில் எவரும் இல்லை என்ற போதும், வீடு பலத்த சேதத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரியவருகிறது.

பேருந்தின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.