இன்றைய ராசிபலன்: 01.09.2020: ஆவணி மாதம் 16ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

செப்டம்பர் 01,2020

இன்று சார்வரி வருடம், ஆவணி மாதம் 16ம் தேதி, மொகரம் 12ம் தேதி, 1.9.2020 செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, சதுர்த்தசி திதி காலை 10:14 வரை, அதன்பின் பவுர்ணமி திதி, அவிட்டம் நட்சத்திரம் மாலை 5:56 வரை, அதன்பின் சதயம் நட்சத்திரம், சித்த – மரணயோகம்

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : புனர்பூசம், பூசம் பொது : காலை 10:15 முதல் கிரிவலம், சிவன் வழிபாடு.

மேஷம்: அசுவினி: மகிழ்ச்சி அதிகரிக்கும் நாள். சிறிதளவு பணவரவு உண்டு. பரணி: பணியாளர்களுக்குத் தாமதமான விஷயங்கள் சுறுசுறுப்பாக நடைபெறும். கட்டிடப் பணியைத் தொடரும் எண்ணம் உருவாகும். கார்த்திகை 1: பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடிவடையும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: யோகமான நாள். பெரிய மனிதர்களைத் தொடர்பு கொண்டு பழைய பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்வீர்கள் ரோகிணி: மனைவியின் ஆலோசனையால் சிக்கனத்தைக் கையாளுவீர்கள். மிருகசீரிடம் 1,2: மனப்பூர்வ உழைப்புக் காரணமாக நன்மை உண்டு.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: பேச்சிலும், செயலிலும் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். திருவாதிரை: இயந்திரப்பணிகளில் கவனமாக இருப்பது நல்லது. புனர்பூசம் 1,2,3: பெண்கள் உணர்ச்சிவசப்படுவதன் மூலம் உறவினரிடையே மனக்கசப்பு உருவாகலாம்.

கடகம்: புனர்பூசம் 4: சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ஒருசிலர் வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் சிறிது சிரமப்படுவீர்கள் பூசம்: பிள்ளைகளிடம் எதிர்மறையாக பேசாதீர்கள். ஆயில்யம்: பணம் தருவதாக வாக்கு கொடுத்தவர்களால் ஏற்படலாம்.

சிம்மம்: மகம்: நம்பிக்கைகள் நிறைவேறும் நாள். மனதுக்கு நெருங்கியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பூரம்: உத்தியோகத்தில் பணியாளர்கள் எதிர்பார்த்த தகவல் கிடைக்கும். பெண்களுக்கு விரும்பிய விஷயங்கள் நிறைவேறும். உத்திரம் 1: பொறுமை தேவைப்படும் நாள்.

கன்னி: உத்திரம் 2,3,4: நேர்மறை எண்ணங்கள் ஏற்படும் நாள். அலுவலகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது அஸ்தம்: சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிப்பீர்கள். சித்திரை 1,2: திடீர் நற்செய்தி ஒன்று உங்களுக்காக காத்திருக்கிறது.

துலாம்: சித்திரை, 3,4: எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் நாள். சகோதர வழியில் சுபச்செய்தி உண்டு. சுவாதி: வீடு, சொத்துப் பராமரிப்பில் தீர்மானித்த விஷயங்கள் நிறைவேறும். விசாகம் 1,2,3: பணியிடத்தில் நேர்மையான செயல் செய்து நிறைவடைவீர்கள்.

விருச்சிகம்: விசாகம் 4: உற்சாகத்துடன் பணிகளைச் செய்வீர்கள். விலை உயர்ந்த மின்னணு பொருட்களை வாங்குவீர்கள். அனுஷம்: மிகவும் முயன்று வெளியூர் பயணம் மேற்கொள்வீர்கள். கேட்டை: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தல் சுமார் லாபம் உண்டு.

தனுசு: மூலம்: வேகத்தைக் குறைத்துக் கொள்ள வேண்டிய நாள். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவீர்கள். பூராடம்: திட்டமிட்ட வேலையை முடிக்க இயலாமல் தடுமாறி, பின் முடிப்பீர்கள். உத்திராடம் 1: தந்தையின் உடல் நலனில் கவனம் தேவை. திடீர் நட்பு உருவாகலாம்.

மகரம்: உத்திராடம்,2,3,4: வேலைப்பளு அதிகரிக்கும் நாள். குடும்பத்தில் ஏற்படும் சலசலப்பைப் புன்னகையுடன் சமாளிப்பீர்கள். திருவோணம்: யாரும் தன்னைப் புரிந்து கொள்ளவில்லை என்ற ஆதங்கம் தீரும். அவிட்டம் 1,2: பெண்கள் மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம்.

கும்பம்: அவிட்டம், 3,4: மனதில் இருந்த பயங்கள் தீரும் நாள். குடும்பத்தில் பெண்களால் நிம்மதி உண்டு. சதயம்: பாதியில் நின்ற வேலைகள் முடியும். பல நாட்கள் சந்திக்காத நண்பர்கள் தொடர்பு கொள்வார்கள். பூரட்டாதி 1,2,3: உறவினர்கள் உங்கள் ஆலோசனை கேட்டு வருவார்கள்.

மீனம்: பூரட்டாதி, 4: எதிர்ப்புகள் நிறைவேறும் நாள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல்கள் குறையும். உத்திரட்டாதி: எதிர்பார்த்த விஷயம் ஒன்றிற்கு அதிகம் செலவாகலாம். ரேவதி: மகன்/ மகளிடமிருந்து மனநிறைவளிக்கும் செய்தி வரும்.