இலங்கையின் சில பகுதிகளில் நேற்று ஆலங்கட்டி மழை….

பலாங்கொடயின் சில பகுதிகளில் நேற்று ஆழங்கட்டி மழை…

பலங்கொடயின் கல்தோட்டை, வெலிஓய நகரத்திற்கு அருகிலுள்ள பகுதிகளில் நேற்று  மாலை ஆழங்கட்டி மழை பெய்துள்ளது.

ஒரு மாத காலமாக அப்பகுதியில் நிலவிய  வறட்சியின் பின்னர் நேற்று குறித்த பகுதியில் மழை பெய்துள்ளது. இதன்போது ஆழங்கட்டிகளும் கொட்டியதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆழங்கட்டி மழையானது  நேற்று பிற்பகல் 3.30 தொடக்கம்  4.00 மணி வரையிலான காலப்பகுதியில் பெய்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

  • குறித்த  பிரதேசத்தில் இதுவரையான காலப்பகுதியில் ஆழங்கட்டி பெய்ததில்லை எனவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.