இணைய வழி கல்விக்கு செல்போன் இல்லாததால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு.!

கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் இவர் விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர். மூத்த மகள் நித்யஸ்ரீ திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இரண்டாவது மகள் பனிரெண்டாம் வகுப்பும், மூன்றாவது மகள் பத்தாம் வகுப்பும் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கொ ரோனா அ ச்சுறுத்தல் கா ரணமாக பள்ளி கல்லூரிகள் கடந்த மார்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. இந்த நிலையில் மூடப்பட்ட பள்ளிகள் கடந்த சில மாதங்களாக திறக்கப்பட்டு இணைய வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே ஆறுமுகத்தின் மூன்று மகள்களுக்கும் இணைய வழியாக வகுப்பு நடத்தப்படுவதாக பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

விவசாயியான ஆறுமுகம் ரூபாய் 20 ஆயிரம் செலவில் ஒரு செல்போன் வாங்கி 3 மகள்களும் ஒரே செல்போனில் ஆன்லைன் மூலம் பாடம் கற்பித்து கொள்ளுமாறு கூறியுள்ளார். ஆனால் சகோதரிகள் 3 பேருக்கும் ஒரே நேரத்தில் வகுப்பு நடத்தப்படுவதால் ஒருவர் மட்டுமே இணைய வகுப்பு மூலம் கல்வி பயில முடியும். மற்ற 2 பேரும் கல்வி பயில முடியாத நிலையில் தங்களுக்கும் தனித்தனியே ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கி கொடுக்க வேண்டும் என்று தந்தையிடம் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் போதிய வருமானம் இல்லாத விவசாயி ஆறுமுகம் மேலும் இரண்டு ஆண்ட்ராய்டு செல்போன் வாங்கித்தர முடியவில்லை. இ தனால் வி ரக் தி அ டைந்த மூ த்த ம களான  நி த்யஸ்ரீ 29ஆம் தேதி வீ ட்டில் யா ரும் இ ல்லாதபோது வி ட்டிலிருந்த பூ ச் சிக்கொ ல்லி ம ருந்தை கு டித்துள்ளார்.

வயலில் வேலை செய்துவிட்டு மாலையில் வீட்டிற்கு வந்த ஆறுமுகம் மற்றும் அவரது இரு மகள்களும் நித்யஸ்ரீ ம யங்கிய நி லையில் இ ருந்தைதை க ண்டு அ திர்ச்சியடைந்தனர். இதையடுத்து நித்யஸ்ரீயை விழுப்புரம் சாலையில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு நித்யஸ்ரீக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அங்கு தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் இருந்த நித்யஸ்ரீ திங்கட்கிழமை சிகிச்சை பலனின்றி உ யிரிழந்தார். இது குறித்து தகவலறிந்த போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நி த்யஸ்ரீ த ற்கொ லை செ ய்து கொ ண்ட ச ம்பவம் அ ந்த கிரா மத்தில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தியுள்ளது.