இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையின் 4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை!

இலங்கையின் நான்கு மாவட்டங்களுக்கு தற்போது மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில், களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை, காலி ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சூரியனின் தென் திசை நோக்கிய தொடர்பான இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 07ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று மதுரங்குளி, தல்கஸ்வெவ, ஹுனுகல்லேவ, மன்னம்பிட்டி மற்றும் கல்குடா ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக நண்பகல் 12.09 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.