இலங்கையில் இரண்டு இளம் பெண்களுடன் இணைந்து நபரொருவர் செய்த செயல்!

வி பச்சா ர விடுதி நடத்திய நபர்கள் கைது…

இலங்கையில் உடற்பிடிப்பு மத்திய நிலையம் என்ற பெயரில் வி பச்சா ர விடுதியொன்று பராமரித்துச் செல்லப்படுவதாக வெயாங்கொடை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றுக்கு அமைவாக வெயாங்கொடை தல்கஸ்மோட்டே பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு பெண்கள் உட்பட மூன்று சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட தேடல் வாரண்ட் படி நேற்று மதியம் 2.30 மணிக்கு இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வி பச்சா ர விடுதியின் முகாமையாளர் மற்றும் முகாமையாளருக்கு உதவி புரிந்த இரண்டு பெண்களுமே இவ்வாறு பொலிஸாரால் கைது செய்யப்பட்டவர்களாவர்.

சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெயாங்கொடை, கெகிராவை, திஸ்ஸமஹாராம பிரதேசங்களை சேர்ந்த 42, 35, 29 வயதுடையவர்கள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் மூவரும் இன்று அத்தனகல்ல நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் வெயாங்கொடை பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.