கனடாவில் திருமணமான ஒரே வாரத்தில் தமிழ் இளைஞனுக்கு ஏற்பட்ட சோகம்…

கனடாவில்…

கனடாவில் இடம்பெற்ற வீதி விபத்தில் இரண்டு தமிழர்கள் உயிரிழந்துள்ளனர்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த விபத்தில் இவர்கள் உயிரிழந்துள்ளனர் என ரொரோற்றோ Blue Mountains தெரிவித்துள்ளனர்.

ஒன்டாரியாவின் Blue Mountains நகரில் நேற்றிரவு குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.

Oshawa மற்றும் Whitchurch-Stouffville நகரங்களை சேர்ந்த 29 வயதான இரண்டு தமிழர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளர்.

உயிரிழந்தவர்களில் ஒருவர் கஜன் தனபாலசிங்கம் என உறவினர்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . இவர் கடந்த 29ஆம் திகதி திருமணம் செய்து கொண்டவர் எனவும் தெரியவருகின்றது.

உயிரிழந்த இருவரும் பயணித்த Audi sedan கார் வீதியை விட்டு வெளியேறி ஒரு மரத்துடன் மோதியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

24 வயதான வாகனத்தின் ஓட்டுநரான Whitchurch-Stouffville நகரை சேர்ந்த 24 வயது இளைஞன் Collingwoodடில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

பின்னர் தீவிரமான நிலையில் அவர் விமானம் மூலம் Toronto பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த விபத்து ஏற்பட்ட போது வாகனத்தில் மூன்று பேர் இருந்ததாக காவல்துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் வாகனம் வீதியை விட்டு வெளியேற என்ன காரணம் என்பது தொடர்பில் கால்வதுறையினரின் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.