கனடாவில் யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த நபருக்கு நடந்த சோகம்..!

கனடாவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த குடும்பஸ்தர் மரணம்..

கனடாவில் ரொறன்ரோவில் கடற்கரை பகுதியில் வியாழக்கிழமை நேற்று மதியம் 12:35 மணியளவில் படகு ஒன்று பாறைகள் மீது மோ தியது குறித்து காவல்துறையினருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது.

20 அடி bowrider படகு ஒன்றை 46 வயதான ஆண் ஒருவர் இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது அந்தப் படகில் ஆறு பயணிகள் இருந்துள்ளனர்.

படகை இயக்கியவர் கட்டுப்பாட்டை இழந்து, Woodbine கடற்கரைக்கு அருகே கரையிலிருந்து சுமார் 90 மீட்டர் தொலைவில் படகு பாறைகளில் வேகமாக மோதியுள்ளது.

இதனை அடுத்து படகு பாறைகளில் மோ தியதன் விளைவாக, 47 வயதான ஒருவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனாலும் அவர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளார்.

அத்துடன் படகை இயக்கியவரும் மீதமிருந்த பயணிகளும் உயிருக்கு ஆபத்தான காயங்களுக்கு உள்ளானார்கள். இவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். மேலும் 3 பேர் சம்பவ இடத்தில் சிகிச்சை பெற்றனர்.

மேலும் இந்த விபத்தில் பலியானவர் இலங்கை யாழ்ப்பாணம் தீருவில் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 47 வயதான இலங்கைகோண் பல்லவநம்பி என உறவினர்கள் மூலம் தெரியவருகின்றது. இவர் 3 பிள்ளைகளின் தந்தை எனவும் தெரியவந்துள்ளது.

விபத்துக்கு முன்னர் படகு அதிக வேகத்தில் பயணிப்பதைப் பார்த்ததாக சம்பவ இடத்திலுள்ள சாட்சிகள் ஊடகங்களிடம் தெரிவித்தனர்.

இந்த விபத்து சம்பவம் குறித்து ரொறன்ரோ காவல்துறையின் போக்குவரத்து சேவைகள் பிரிவும் கடல் பிரிவும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.