கழுத்து நிறைய தங்க நகை..முகக்கவசம் அணியாமல் திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு நேர்ந்த சோகம்..!!

தமிழகம்..

தமிழகத்தில் திருவேற்காட்டில் முகக்கவசம் அணியாமல் வந்த புதுமண தம்பதிக்கு அதிகாரிகளால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, கொரோனா ஊரடங்கு தளர்வு மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவிலை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. ஆனால், கோவில்களுக்கு சிறுவர்கள், பெரியவர்கள் வரக்கூடாது என்றும், பொது இடங்களுக்கு வரும் மக்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த நிலையில், திருவேற்காடு நகராட்சி பகுதியில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் மக்கள் முகக்கவசம் அணிந்து வருகின்றனரா? என்பது குறித்து நகராட்சி ஆணையர் செந்தில் குமரன், கோவில் இணை ஆணையர் இலட்சுமணன் மற்றும் சுகாதார ஆய்வாளர் பால்ராஜ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் முகக்கவசம் அணியாமல் கோவிலுக்கு வந்து திருமணம் செய்த புதுமண தம்பதிக்கு அபராதம் விதித்து, அவர்களுக்கு முகக்கவசத்தையும் வழங்கினர்.

மேலும், அவர்களின் உடல் வெப்பநிலை சோதனை செய்து, சானிடைசர் வழங்கிய பின்னரே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனரா? என்பது குறித்தும் சோதனை செய்தனர்.