சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பெண்ணிற்கு மருத்துவர் செய்த காரியம்..பரிதாபமாக பறிபோன உயிர்!!

மருத்துவரின் தவறான சிகிச்சையால் பறிபோன உயிர்…

இந்தியாவில் உள்ள திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கிராமத்தைச் சேர்ந்த சின்னப்பன் என்பவரின் மனைவி விண்ணரசி, இம் மாதம் 1ஆம் தேதி எதிர்பாராத விபத்தில் சிக்கியுள்ளார். இதனை அடுத்து அவர் தண்டராம்பட்டு ரோட்டில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

அதன் போது மருத்துவர் யோகேஸ்வரர் அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து உள்ளார். மயக்க மருந்து கொடுக்க வேண்டிய நிலை இல்லை என்று கூற அதனை மறுத்து மருத்துவர் அவருக்கு மயக்க ஊசி போட்டுள்ளார்.இதனால், அவருக்கு வ லிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதனை அடுத்து அவர் வேலூர் சி.எம்.சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். அங்கும் மருத்துவம் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதால், மீண்டும் அதே தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அதிகாலை நேரத்தில் விண்ணரசி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து மருத்துவரின் தவறான சிகிச்சையால் அந்த பெண் உயிரிழந்ததாக உறவினர்கள் போ ராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்ணினால் அந்த கிராமமே மிகுந்த சோகத்தில் உள்ளது .