திருநங்கையை கரம்பிடித்த இளைஞன்..பெற்றோரின் நெகிழ்ச்சி செயல்.!!

தமிழ்நாடு..

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியப்பாட்டியை அடுத்துள்ள வலையன்குளம் கிராமத்தை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மகன் கருப்பசாமி (வயது 21). கருப்பசாமி ஓட்டுநராக உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த தினகரன் என்பவரது மகன் கருப்பசாமி (வயது 24).

 

இந்த இளைஞன் கடந்த 2 வருடத்திற்கு முன்னதாக திருநங்கையாக மாறி, தனது பெயரினை கரீனா (வயது 21) என்று மாற்றிக்கொண்டுள்ளார். இந்த நிலையில், ஓட்டுநராக பணியாற்றி வரும் கருப்பசாமியும், கருப்பசாமியாக இருந்து கரீனாவாக மாறிய திருநங்கையும் உறவினர்களாக இருந்துள்ளனர்.

இதனை அடுத்து , இவர்கள் இருவரும் அடிக்கடி சந்தித்து பேசி வந்துள்ளனர்.இதன் பின்னர் இருவரும் நாளடைவில் காதல் வயப்பட்டுள்ளனர். இருவரும் காதலித்து வந்த நிலையில், கரீனாவை திருமணம் செய்யப்போவதாக கருப்பசாமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.

மகனின் முடிவிற்கு பெற்றோர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பின்னாளில் மகனின் முடிவை பெற்றோர்கள் ஏற்றுக்கொண்டனர். இதனையடுத்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கருப்பசாமி கரீனாவை திருமணம் செய்துகொண்டுள்ளார்.இந்த சம்பவமானது அனைவரையும் நெகிழ்ச்சி அடைய செய்துள்ளது.