இலங்கையில் வாகன பாவனையாளர்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்…

வாகன பாவனையாளர்களுக்கு முக்கிய தகவல்!

நடை பாதையில் வாகனங்களை நிறுத்துவது தொடர்பில் வருகின்ற நாட்களில் கடுமையான சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை பொலிஸ் போக்குவரத்து தலைமையகம் பொறுப்பான இயக்குனர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்துள்ளார்.

இதற்கமைய கிரேன்கள் அல்லது சில பொருட்களை பயன்படுத்தி நடைபாதையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அகற்ற நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அதற்காக செலவாகும் பணத்தை உரிமையாளர்கள் செலுத்த வேண்டும் எனவும், 

வாகனங்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதனையும் உரிமையாளர்கள் ஏற்க நேரிடும் எனவும் பொலிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.