கட்டுநாயக்க விமான நிலையம் எப்போது திறக்கப்படும்?
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் சுற்றுலா பயணிகளுக்காக மீண்டும் திறப்பதற்கான காலம் மேலும் தாமதமாக கூடும் என சுற்றுலா அமைச்சின் தகவல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அத்துடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் விமான நிலையத்திற்குள் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளின்றி நாட்டிற்கு நுழைவதற்காக காலப்பகுதியை உறுதியாக கூற முடியாதென சுற்றுலா அமைச்சின் செயலாளர் எஸ்.ஹெட்டிஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு முன்னர் ஒக்டோபர் மாதம் விமான நிலையத்தை திறப்பதாக அரசாங்கம் தீர்மானித்திருந்தது.
இந்த நிலையில் சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்படும் ஆலோசனைக்கமையவே விமான நிலையம் முழுமையாக திறக்கப்படும் என சுற்றுலா அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
உலக சுகாதார அமைப்பின் தகவலுக்கமைய கொரோனா வைரஸ் தீவிரம் இன்னமும் நீங்கவில்லை எனவும் மேலும் இரண்டு வருடங்களாக கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் காரணமாக இது குறித்து கருத்திற்கொள்ளாமல் சுகாதார பாதுகாப்பு நிபந்தனைகளை தளர்த்துவது கஷ்டமான விடயம் என்று செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.