கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்..!!

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்..

இலங்கையில் கொரோனா தொற்றுநோய் காரணமாக மூடப்பட்ட பாடசாலைகளில் மாணவர்களுக்கான அனைத்து கல்வி நடவடிக்கைகளும் எதிர்வரும் 8ம் திகதி முதல் வழமை போல் மீண்டும் தொடங்கும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மாதம் பல கட்டங்களாக ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளில் ஆரம்ப வகுப்புகளின் கல்வி நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

செப்டம்பர் 02ம் திகதி தொடக்கம், 06 முதல் 13 ஆம் வகுப்பு வரையிலான கல்வி நடவடிக்கைகள் வழக்கம் போல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஆரம்ப வகுப்புகளின் ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்கள் நாளை பாடசாலைக்கு வருவார்கள், கல்வி நடவடிக்கைகள் வழக்கம்போல நாளை முதல் தொடங்கும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், பாடசாலை மாணவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை தவிர்க்கின்றனர் என சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சரியான சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றாவிட்டால் நாட்டில் கொரோனா தொற்று மீண்டும் ஏற்படும் அபாயம் இருப்பதாக தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரித்துள்ளார்.