மட்டக்களப்பு-வாகரை பகுதியில் நீரில் மூழ்கி சிறுமி ஒருவர் உயிரிழப்பு..!!

நீரில் மூழ்கி சிறுமி பலி…

மட்டக்களப்பு வாகரைப்பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்ற கிராமமான குகனேசபுரம் கிராமத்தில் குளத்தில் குளிக்கச்சென்ற சிறுமி ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலை பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன குறிப்பிட்டுள்ளார்.

வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் மீள்குடியேற்றக் கிராமமான குகனேசபுரம், காழி கோவில் வீதி, 06ம் குறுக்கைச்சேர்ந்த சண்முகநாதன் விஜய ரூகினியும் அவரது சகோதரியும் இன்று (05.09.2020) மாலை ஆலங்குளத்திற்கு குளிக்கச்சென்ற போதே இத்துயர சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாக வாழைச்சேனைப் பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்த சிறுமி சண்முகநாதன் விஜய ரூகினி (வயது 12), ஆலங்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 06ல் கல்வி பயின்ற மாணவி என்பதுடன், மூன்று பேருள்ள குடும்பத்தில் இச்சிறுமி மூன்றாவது பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கது.