ஜனாதிபதி கோட்டாபயவின் உத்தரவு..
நாட்டில் அமைச்சர்கள் முன்னெடுக்கும் பணி தொடர்பில் அறிக்கை ஒன்றை ஜனாதிபதி கோரியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு வாரத்திலும் ஒரு முறை தாம் பணி செய்யும் நிறுவனம் தொடர்பில் தான் உட்பட அமைச்சர்களிடமும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிக்கை ஒன்று கோரியுள்ளார் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர் இதனை மட்டக்களப்பின் பிரதான தபால் நிலைய கண்காணிப்பின் போது தெரிவித்துள்ளார்.
மேலும் தபால் நிலையத்தில் ஏற்பட்டுள்ள நட்டம் தொடர்பில் ஆராய்ந்து பார்க்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒவ்வொரு புதன் கிழமையும் தன்னை நேரில் சந்திக்க முடியும் என அவர் மேலும் கூறியுள்ளார்.