வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று விபத்து..! பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில்!

கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து விபத்து…

வவுனியாவிருந்து கொழும்பு நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று சாலியவேவா பகுதியில் விபத்துக்குள்ளானதில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.

வவுனியா – பண்டாரிக்குளம் பகுதியில் அமைந்துள்ள தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் சொகுசு பேருந்து வவுனியா புதிய பேருந்து நிலையத்திலிருந்து கொழும்பு நோக்கி நேற்று மதியம் பயணத்தினை ஆரம்பித்துள்ளது.

அனுராதபுரம் – புத்தளம் பாதை ஊடாக கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சமயத்தில் நேற்று மாலை 4.30 மணியளவில் சாலியவேவா பாடசாலைக்கு அருகே பேருந்து சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளனாது. 

அதன் பின்னர் பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரும் அவசர பாதை ஊடாக பேருந்திலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தில் 10க்கு மேற்பட்ட பயணிகள் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவருகின்றது. மழை காரணமாகவே இவ்விபத்து இடம்பெற்றதாகவும் பயணிகள் குறிப்பிட்ள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.