212 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்… தீப்பிழம்பைக் கக்கிய எஞ்சின்: கமெராவில் சிக்கிய ப யங்கர காட்சி!

212 பயணிகளுடன் புறப்பட்ட விமானம்

ஹானலூலூவிலிருந்து புறப்பட்ட விமானம் ஒன்றின் எஞ்சின், விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்குள் வெ டித்து தீ ப்பிழம்பைக் கக்கும் ப யங்கர காட்சிகள் வெளியாகி அ ச்சத்தை ஏற்படுத்தியுள்ளன.

அட்லஸ் ஏர் விமானம் ஒன்று 212 பயணிகளுடன் அமெரிக்காவின் ஹானலூலூவிலிருந்து புறப்பட்ட நிலையில், அதன் எஞ்சின்களில் ஒன்று சேதமடைந்துள்ளது.

வெளியாகியுள்ள வீடியோ ஒன்றில், விமானத்தின் எஞ்சின் தீப்பிழம்பைக் கக்குவதால் ஏற்படும் வெளிச்சம் மின்னல் போல் விமானத்திற்குள் பளிச்சிடுவதைக் காணமுடிகிறது.

உடனடியாக விமானம் அவசரமாக தரையிறங்குவதாக விமானி அறிவித்ததைத் தொடர்ந்து, விமானம் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானத்திலுள்ள பயணிகள் அனைவரும் பத்திரமாக இருப்பதாக தெரியவந்துள்ளது.

எதனால் எஞ்சினில் தீப்பற்றியது என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளனர்.