கிளிநொச்சி-பரந்தன் பகுதியில் இளம் காதல் ஜோடி எடுத்த விபரீத முடிவு! கதறும் உறவினர்கள்.!

முல்லை நியூஸ் செய்திகளுக்காக Theivendran Thiruneepan

கிளிநொச்சி – பரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் தூ க் கில் தொ ங் கிய நி லையில் ஆண், பெண் இருவரின் ச டலங்கள் இன்று (10-9-2020) காலை மீ ட்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் திகதி முதல் காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த பரந்தனைச் சேர்ந்த யாழ்ப்பாணம் மின்சார சபையில் பணியாற்றும் சுசிதரன் (28-வயது) இரத்தினபுரத்தைச் சேர்ந்த கிளிநொச்சி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் தனுஷியா (27-வயது) ஆகியோரின் ச டலங்களே மீ ட்கப்பட்டுள்ளது.

குறித்த இருவரும் காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த யுவதிக்கு ஒரு வாரத்திற்கு முன்னதாகவே பிரதேச செயலகத்தில் வேலை கிடைத்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் இளம் காதல் ஜோடி த ற் கொ லை செ ய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.