தற்போதைய அரசாங்கத்தின் தி டீர் முடிவு! 60 வருட நடைமுறையில் மாற்றம்..!

அரசாங்கத்தின் தி டீர் முடிவு!

நாட்டில் அரச நிறுவனங்களில் இடம்பெறும் பொது மக்கள் சந்திக்கும் தினத்தை திங்கள் கிழமை மாற்றுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளார். இந்த விடயத்தை அமைச்சரவையின் இணை ஊடகப்பேச்சாளர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

அரச நிறுவனங்களில் இதுவரையில் புதன் கிழமைகளில் நடைபெற்று வந்த சந்திப்பை எதிர்வரும் காலங்களில் திங்கள் கிழமை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் 60 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் மக்கள் தினத்தை புதன்கிழமை நடத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சுகள் மூலம் தங்கள் சேவைகளை நிறைவேற்றுவதில் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண 1960 முதல் புதன்கிழமை ஒரு பொது நாளாக இருந்து வருகின்றது.

இருப்பினும், புதன்கிழமை ஒரு நாடாளுமன்ற நாள் என்பதால், அன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதற்கு ஒரு தீர்வாக, வாரத்தில் நாடாளுமன்றம் அல்லாத நாளான திங்கட்கிழமை இனி மக்கள் தினமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.