நடிகை வனிதா…

நடிகை வனிதா விஜயகுமார் தளபதி விஜய்யுடன் நடித்த சந்திரலேகா திரைப்படம் மூலமாக கதாநாயகியாக தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானவர். அதனை அடுத்து தெலுங்கு திரையுலகில் ஹிட்லர் பிரதர்ஸ், தேவி போன்ற படங்களில் அவர் நடித்திருப்பார். 2000 ஆம் ஆண்டு அவர் ஆகாஷ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
இந்த திருமண வாழ்க்கையில் கருத்து வேறுபாடு காரணமாக 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்தார். அப்பொழுது அவருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தன. பின்னர் ஆந்திராவை சேர்ந்த ஆனந்த் ஜெய் ராஜன் என்பவரை மீண்டும் திருமணம் செய்து கொண்டார். அதன் பின் அவருடனும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றார்.
பின்னர் தனது குழந்தைகளுடன் வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அதன்பின்னர் விஜய் டிவியின் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் அவர் கலந்து கொண்டார். தற்பொழுது வனிதா விஜயகுமார் என்ற யூடியூப் சேனல் ஒன்றை வைத்து நிர்வகித்து வருகின்றார்.
இந்த நிலையில் வனிதாவுக்கு பீட்டர் பால் என்பவரோடு மீண்டும் திருமணம் நடைபெற்றது. பல்வேறு சர்ச்சைக்குரிய பிரச்சனைகள் நடந்த நிலையில், வனிதா தற்போது அவரது இன்ஸ்ட்டாவில் பீட்டர் பாலை போல விக் வைத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் “மீசையில்லாத பீட்டர் பால்” என்று கிண்டல் செய்து வருகின்றனர்.