இந்தியா..
இந்தியாவில் மத்திய பிரதேச மாநிலத்தில் அசோக்நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உம்ராவ் சிங் என்ற முதியவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
அப்பொழுது அவரது படுக்கைக்கு அருகே குடி பாய் என்ற 55 வயது பெண்ணும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இருவரின் படுக்கைகளும் அருகருகே இருந்ததால் இருவரும் மருத்துவமனையில் பேசிக் கொண்டே இருந்துள்ளனர்.
அதன் பின்னர் மூன்று நாட்களில் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். சிகிச்சை முடிந்தபின் உம்ராவ் தனது கிராமத்திற்கு குடி பாயை அழைத்துச் சென்று இருக்கின்றார். அங்கு இருக்கும் தனது நான்கு மகன்கள் மற்றும் 12 பேரக்குழந்தைகளுடன் உரையாடிவிட்டு பின்னர் தங்களது காதல் குறித்து அவர்களிடம் கூறியுள்ளனர்.
இதன் பின்னர் அவர்களிடம் திருமணத்திற்கு அனுமதி வாங்கி இருக்கின்றார்கள்.இதனை அடுத்து கிராம மக்கள் முன்பாக புதிய ஆடைகளை உடுத்தி மேளதாளத்துடன் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது.