தமிழகம்..
தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டை அடுத்துள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ஜானகி ராமன். இவரது மனைவி யுவராணி. இவர்களின் எட்டு வயதான மகள் கீர்த்தனா, அங்குள்ள பள்ளியில் 3 ஆம் வகுப்பில் படித்து வந்துள்ளார்.
அதே ஊரை சேர்ந்த முரளி என்பவரின் மகள் பாவனா (வயது 12). சிறுமி பாவனா அங்குள்ள பள்ளியில் 7 ஆம் வகுப்பில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர்கள் இருக்கும் பகுதியில் இருக்கின்ற தடுப்பணையில் மழை காரணமாக 25 அடி உயரத்திற்கு தண்ணீர் நிரம்பிக் காணப்பட்டுள்ளது.
இதனை வேடிக்கை பார்த்துவிட்டு, அருகில் உள்ள கானாற்றில் நீராட, துணிகளை துவைக்க அப்பகுதி பெண்கள் மற்றும் சிறுமிகள் உட்பட 20 பேர் அங்கு சென்றுள்ளனர். அவர்களுடன் கீர்த்தனா மற்றும் பாவனாவும் சென்றுள்ளனர்.
அந்த நேரத்தில், சிறுமிகளான கீர்த்தனாவும், பாவனாவும் ஆற்றில் இறங்கி விளையாடவே, திடீரென அதிகரித்த நீர்ப் பெருக்கின் காரணமாக சிறுமிகள் இருவரும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெண்கள் கத்தி சத்தம் எழுப்பவே, ஆற்றில் குளித்துக்கொண்டு இருந்தவர்கள் சிறுமிகளை மீட்டுள்ளனர்.
இதனை அடுத்து சிறுமிகள் இருவரையும் அங்குள்ள மருத்துவமனைக்கு தூ க் கி சென்ற நிலையில், கீர்த்தனா சிறிது நேரத்தில் உயிரிழந்துள்ளார். பாவனா வேலூர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதித்த பின் உயிரிழந்துள்ளார்.
சிறுமிகளின் இறப்பு சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், இனி மழைக்காலம் என்பதால் பெற்றோர்கள் குழந்தைகளை கவனத்துடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.