விமானத்தில் ப ரப ரப்பை ஏற்படுத்திய இலங்கை பயணி!
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் இலங்கை பயணி ஒருவர் செய்த காரியத்தால் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சவுதி அரேபியாவில் இருந்து இலங்கை நோக்கி செல்ல இருந்த விமானத்திலேயே பயணி ஒருவர் வெளியேற்றப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் தவறான ஆசனத்தில் பயணி ஒருவர் அமர்ந்தமையினால் குழப்ப நிலைமை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, குறித்த பயணியை விமானத்தில் இருந்து இறக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குறித்த விமான பயணி தனக்காக ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் அமர்ந்துக் கொள்ளாமையினால் விமான ஊழியர்களுடன் தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலைமை தீவிரமடையும் போது இன்னும் ஒரு பயணி தனது கையடக்க தொலைபேசியில் சம்பவத்தை வீடியோவாக ஒளிப்பதிவு செய்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் 6 நோயாளிகளை அழைத்து செல்வதற்காக ஒதுக்கப்பட்டிருந்த ஆசன பகுதியில் இந்த நபர் அமர்ந்துள்ளார்.
அவருக்கான ஆசனத்தில் அவரை அமருமாறு பல முறை கூறியுள்ளனர். ஆனாலும் அவர் அந்த கோரிக்கையை நிராகரித்ததாக ஸ்ரீலங்கன் விமான சேவை பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த நபர் மன நோயினால் பாதிக்கப்பட்ட ஒருவர் என பின்னர் அடையாளம் காணபட்ட நிலையில் அவர் வைத்திய சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அனுப்புவதற்கு இலங்கை தூதரக அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.