வடிவேல் பாலாஜியின் மகன், மகளின் கல்விச் செலவை ஏற்கிறேன் என பிரபல நடிகர் அறிவிப்பு.!!

வடிவேல் பாலாஜி

சின்னத்திரையின் பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உடல்நலக்குறைவால் காலமானார். பிரபல தொலைக்காட்சி நிறுவனத்தில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமாகிய வடிவேல் பாலாஜி, மக்கள் மனதில் மிகவும் பிரபலமானவர். இவர் நடிகர் வடிவேலுவை போலவே காமெடி செய்து பிரபலமானர். பார்ப்பதற்கும் வடிவேல் போலவே ஒரு சாயல் இருப்பதால், இவருக்கு வடிவேல் பாலாஜி என்று பெயர் வந்தது.

கடந்த 15 நாட்களுக்கு முன் வடிவேல் பாலாஜிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அவருக்கு கை, கால் செயலிழந்துள்ளது. இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். வடிவேல் பாலாஜியின் மரணத்துக்கு திரைத்துறை நடிகர் நடிகைகளும் சின்னத்திரை பிரபலங்ளும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மறைந்த வடிவேல் பாலாஜி மகன் மற்றும் மகளின் கல்வி செலவு முழுவதையும் (கல்லூரிப் படிப்பு வரை) ஏற்பதாக நடிகர் சிவகார்த்திகேயன் அறிவித்துள்ளார்.