இந்தியா..
இந்தியாவில் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கின்ற ஆரல்வாய்மொழி தெற்கு பெருமாள்புரம் பிரதேசத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 41). இவர் ஆட்டோ ஓட்டுநராக இருந்து வருகிறார். இவரது மனைவி ஈஸ்வரி (வயது 38). இவர்களுக்கு 14 வயதுடைய ரவீனா என்ற மகள் இருக்கிறார். கடந்த ஒன்பது மாதங்களுக்கு முன்னதாக மணிகண்டன் குடும்பத்துடன் அங்குள்ள இலட்சுமிபுரம் பகுதியில் வசித்துள்ளார்.
அப் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்த நிலையில், நே ற்று மு ன்தினம் கு டும்பத்துடன் வீ ட்டில் வி ஷம் கு டி த்து ம ய க்கம் அ டைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். இ தனைக்கண்டு அ திர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், மூவரையும் மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இவர்களுக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், கடந்த 9 மாதத்திற்கு முன்னர் வாங்கிய கடன் சுமை அதிகரித்ததும், ஊரடங்கால் க டன் தொ ல்லை மே லும் அ திகரித்து கு டும்பமே த ற் கொ லை செ ய்வதற்கு மு டிவு எ டுத்துள்ளது தெரியவந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் பரிதமாக நேற்று உயிரிழக்கவே, மனைவி, மகள் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அப் பகுதியில் பெ ரும் அ திர்ச்சியை உண்டாக்கியுள்ளது.