கொழும்பில் பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்!

கொழும்பு வாழ் பொது மக்களுக்கு ஓர் எ ச்சரிக்கை!

கொழும்பில் சில இடங்களில் பயன்பாட்டுக்கு பொருத்தமற்ற வகையில் விற்பனை செய்யப்பட்ட பெருந்தொகை முகக்கவசங்கள் மீட்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் மத்திய கொழும்பு சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய, நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது மீண்டும் பயன்படுத்த முடியாத 3128 முகக் கவசங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் பிற்பகல் கொழும்பு, கோட்டை கட்டடம் ஒன்றில் முகக் கவசங்கள் காய வைத்திருந்த நிலையில் கைப்பற்றப்பட்டுள்ளது.

அந்த இடத்தில் நீல நிறம், வெள்ளை நிறம் மற்றும் KN 95 ரக முகக் கவசங்கள் பாரியளவில் காய வைக்கப்பட்டிருந்த போதே அவை கண்டுபிடிக்கப்பட்டதாக சுகாதார பரிசோதகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் மழையில் முகக் கவசம் நனைந்து விட்டதாகவும் அதனை இவ்வாறு காய வைத்ததாகவும் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும் சந்தேகத்திற்கமைய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதுடன், குறித்த முகக் கவசங்கள் சீல் வைப்பதற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முகக் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வாறான மோசடியான செயற்பாடுகளிலிருந்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என எச்சறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.