யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவித்தல்..”

யாழில் சில பகுதிகளில் மின் துண்டிப்பு!

யாழ்ப்பாணத்தில் பல பிரதேசங்களில் மின்துண்டிப்பு அமுல் படுத்தப்படவுள்ளதாக மின்சார சபை தகவல் அறிவித்துள்ளது.

குறித்த மின்தடை நாளையதினம் காலை 08.00 மணி தொடக்கம் மாலை 05.00 மணி வரையான காலப்பகுதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உயர் மின் அழுத்த – தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது.

இதற்கமைய, சந்தர் கடையடி, கரவெட்டி, சாமியன் அரசடி, நெல்லியடி – கொடிகாமம் வீதி, கிழவி தோட்டம், இந்திர அம்மன் கோவிலடி, தாமரைக் குளத்தடி, கலிகை, வெலிக்கந்தோட்டம், துன்னாலை, யாக்கரு, சாவகச்சேரி புகையிரத நிலையம், சாவகச்சேரி நகரம்,

பலாலி வீதியில் இருந்து முலவை சந்தி வரை, புகையிரத நிலைய வீதி, மார்ட்டீன் வீதி, 1,2,3,4, ஆம் குறுக்குத் தெருக்கள், கொன்வென்ட் பாடசாலை, ஓடக்கரை வீதி, டேவிட் வீதி, சென். பற்றிக்ஸ் வீதி, யாழ். புகையிரத நிலையம் ஆகிய பகுதிகளில் மின்துண்டிப்பு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.