இலங்கையில் ஒரே நாளில் கோடிகளுக்கு அதிபதியான யாழ் குடும்பஸ்தர்..!!

யாழ் நபருக்கு அடித்த அதிஷ்டம்..!

யாழ்ப்பாணம் வலிகாமத்தைச் சேர்ந்த நபரொருவர் லொத்தர் மூலம் ஒரேநாளில் 3 கோடி 71 இலட்சம் ரூபாவிற்கு அதிபதியாகி இவ் ஆண்டிற்கான முதலாவது கோடீஸ்வரராக பதிவாகியுள்ளார்.

நேற்று முன்தினம் தேசிய லொத்தர் சபையினால் அதிஷ்டம் பார்க்கப்பட்ட மஹஜன சம்பத (4246) சீட்டிழுப்பில் ஆங்கில எழுத்தும், ஆறு இலக்கங்களும் பொருந்தியதில் அன்றைய சுப்பர் ஜக்பொட் பரிசான 3 கோடியே 71 இலட்சம் (37, 180, 999) ரூபாவை வென்றுள்ளார்.

யாழ் பிரதான வீதி, சங்கானையில் கடந்த மூன்று வருடங்களாக விற்பனை முகவராக A.M.லொத்தர் விற்பனை முகவர் நிலையம் நடத்தி வரும் இதே பகுதியை சேர்ந்த A.M.த.சகீஜன் விற்பனை செய்த மஹஜன சம்பத சீட்டின் மூலமே மேற்படி லொத்தர் பரிசில் தொகை வெல்லப்பட்டுள்ளது.

மேலும் இந்த சீட்டிழுப்பில் குறித்த நபர் மூன்றாவது கோடீஸ்வரராகவும் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் A.M லொத்தர் விற்பனை முகவர் நிலையத்தின் உரிமையாளர் A.M.த.சகீஜன் குறிப்பிடுகையில், எனது விற்பனை மூலம் 3 கோடி 71 இலட்சம் ரூபா வெல்லப்பட்டுள்ளமை குறித்து மகிழ்ச்சியடைகிறேன்.

எங்கள் விற்பனை நிலையம் மூலம் எட்டு இலட்சாதிபதிகள் இதற்கு முன்னரே உருவாகியுள்ளனர். இந்த வருடம் மாசி மாதம் 29ஆம் திகதி சங்கானையைச் சேர்ந்த ஒருவர் ஐந்து இலட்சம் ரூபாவை வென்றுள்ளார் என கூறியுள்ளார்.

மேலும், கடந்த பத்து வருடங்களுக்கு முன்னர் சங்கானையில் வேறொரு முகவர் ஊடாக விற்பனை செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் மஹஜன சம்பத சீட்டிழுப்பில் 3.8 கோடி ரூபாவும் வெல்லப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் சாவகச்சேரியில் ஆறு கோடி ரூபாவும் வெல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.