கொழும்பில் அமுல்படுத்தப்பட்ட வீதி ஒழுங்கை சட்டத்தை தளர்த்த தீர்மானம்..!!

கொழும்பில் அமுல்படுத்தப்பட்ட வீதி ஒழுங்கை சட்டத்தில் மாற்றம்..

கொழும்பு நகரில் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த வீதி ஒழுங்கை சட்டம் நேற்று முதல் தளர்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த சில நாட்களாக அமுல்படுத்தப்பட்ட குறித்த திட்டம் வெற்றியளிக்காத காரணத்தினாலேயே இந்த முடிவினை எடுத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய மோட்டார் சைக்கிள்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள், பேருந்து முன்னுரிமைப் பாதையில் செல்ல வேண்டும் என அமுல்படுத்தப்பட்டிருந்த சட்டம் நேற்று முதல் தளர்த்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.