தமிழகம்…

தமிழகத்தில் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலம் ஒளிமதி என்ற பகுதியை சேர்ந்த அபிநயா மற்றும் ஆனந்தராஜ் இருவரும் அண்ணன் தங்கை. மிகவும் பாசமான அண்ணன் தங்கை இவர்கள்.
இந்த நிலையில் பக்கத்தில் உள்ள கிராமத்தில் சுப நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள ஆனந்தராஜ் மற்றும் அபிநயா இருவரும் ஒன்றாக இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். ஆனந்தராஜ் வாகனத்தை ஓட்ட அபிநயா பின்னாடி அமர்ந்துகொண்டுள்ளார்.
இதன் போது மன்னார்குடி அருகே சொக்கபாதி பெருமாள் கோவிலுக்கு அருகில் இருவரும் சென்று கொண்டிருந்த வேளை எதிரே வந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக மோதுன்டதில் இருவரும் வேகமாக தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிர் பிரிந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்த தலையாமங்கலம் காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இருவரது உடலையும் கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதனை அடுத்து,விபத்துக்கான காரணம் குறித்து ஆய்வினை நடத்தி வருகின்றனர். அதிக பாச பிடிப்போடு காணப்படும் அண்ணன் தங்கை இருவரும் மரணத்தில் கூட ஒன்றாக சென்றது குடும்பத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
