இன்று அதிகாலையில் ஏற்பட்ட கோரச் சம்பவம் !

இலங்கையில் கண்டி – பூவெலிகட – சங்கமித்த வீதியில் உள்ள கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் பலியானவர்களின் விபரம் வெளியாகியுள்ளது.
இந்த அனர்த்தத்தில் Travellers Nest ஹோட்டலின் உரிமையாளரும், அவரது மனைவி மற்றும் இரண்டு மாத குழந்தையே பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்த ஹோட்டலின் உரிமையாளர் கடந்த வருடம் நவம்பர் மாதம் திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இன்று அதி காலை 5 மணியளவில் கண்டியில் Sun Ray ஹோட்டலுக்கு அருகில் உள்ள 5 மாடிக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இந்த குடும்பத்தினர் உயிரிழந்துள்ளனர்.
இடிபாடுக்குள் சிக்கிய குழந்தை காப்பாற்றப்பட்டு கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் உயிரிழந்துள்ளார். குழந்தையின் தந்தையும் தாயும் சடலங்களாக கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து மீட்கப்பட்டனர்.
அந்த பிரதேசத்தில் ஏற்பட்ட நில தாழிறக்கம் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
