இலங்கையில் திடீரென விற்கப்பட்ட வாகனங்கள்! பின்னணி குறித்து வெளியான தகவல்..!

இலங்கையில் திடீரென விற்றுத் தீர்க்கப்பட்ட வாகனங்கள்..

நாட்டில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் 90 சதவீதமானவை சமீப காலங்களில் திடீரென விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க காலம் வரை இடம்பெறாது என்ற அச்சத்தில் இவ்வாறு வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டமையே இதற்கு காரணம் என வாகன இறக்குமதியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதற்கமைய கடந்த காலங்களில் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களில் தற்போது 10 வீதத்திற்கும் குறைவான அளவே உள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

எவ்வாறு இருப்பினும் இப்படி அதிக விலையில் வாகனம் கொள்வனவு செய்ய வேண்டிய எந்தவொரு அவசியமும் ஏற்படவில்லை என சங்கத்தின் தலைவர் கூறியுள்ளார்.

மேலும் தற்போது சந்தையில் பயன்படுத்திய வாகனங்கள் மாத்திரமே இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.