கொரோனாவின் பேரில் கணவன் நடத்திய நாடகம்…பொலிஸாரின் தீவிர விசாரணையால் அம்பலமான உண்மை..!

மும்பை…

இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பை பகுதியில் வசிக்கும் மணிஷ் மிஸ்ரா என்பவர் தனது மனைவிக்கு போன் செய்து தனக்கு கொரோனா என்றும், தான் உயிர் பிழைக்க மாட்டேன் என்றும் கூறி விட்டு உடனடியாக அழைப்பை துண்டித்துள்ளார்.

இதை கேட்டு பதறிப்போன அவரது மனைவி தனது கணவனுக்கு பல முறை கால் செய்தும், தொடர்பு கொள்ள முடியவில்லை. இதனால், அழுது கொண்டே அவர் காவல் நிலையத்திற்கு சென்று தனது கணவன் காணவில்லை என்று புகார் செய்துள்ளார்.

இந்தப் புகாரினை தொடர்ந்து விசாரணை செய்த காவல்துறையினர் அவருடைய செல்போன் சிக்னல் கிடைத்த பகுதியைக் கொண்டு ஆய்வு மேற்கொண்டு அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து சென்றபொழுது, அவர் வேறு ஒரு பெண்ணுடன் காரில் சென்றது தெரிய வந்துள்ளது.

இதற்கமைய போலிஸாரின் தீவிர விசாரணையின் மூலம் அவர் வேறு ஒரு பெண்ணுடன் குடும்பம் நடத்தி வருவது கண்டறியப்பட்டுள்ளது. கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருக்க தனக்கு கொரோனா என்று கூறிவிட்டு மிஸ்ரா தலைமறைவான விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.