நண்பர்களை பார்க்க சென்ற இளைஞனுக்கு நடந்த கோர சம்பவம்…துடிதுடிக்க பறிபோன உயிர்..!!

இந்தியா..

இந்தியாவில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரம் பிரதேசத்தை சேர்ந்தவர் லூக்காஸ். இவரது மகன் கில்பர்ட் குமார் (வயது 28). இவர் கணினி பொறியாளராக உள்ளார்.அவர் அம்பத்தூரில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

இந்த நிலையில் குறித்த இளைஞர் ஆலந்தூரில் உள்ள தனது நண்பர்களை சந்தித்து விட்டு,தனது இருசக்கர வாகனத்தில் திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். அங்குள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் எதிரேயுள்ள ஜி.எஸ்.டி வீதியால் வந்த போது, மணல் ஏற்றிக்கொண்டு வந்த லாரி ஒன்று கில்பர்ட் குமாரின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக தகவல் அறிந்த போலிஸார், மணல் லாரி ஓட்டுநரான விஜயகுமார் (வயது 28) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் இந்த விபத்து சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.