இலங்கையில் மேலும் அதிகரிக்கும் கொரோனா நோயாளிகள்… மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரிக்கை..!!

இலங்கை தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் எச்சரிக்கை…

நாட்டில் சுகாதார வழிமுறைகளை பின்பற்றப்படாவிடின் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவை ஏற்படக் கூடும் என்று இலங்கை தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் வைத்தியர் சுதத் சமரவீர எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொரோனா வைரஸினை கட்டுப்படுத்துவதற்காக பொது மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவது மிகவும் அவசியமாகும். மக்கள் உரிய சுகாதார முறைகளுக்கு அமைய செயற்படவில்லை என்றால் வெகு விரைவில் நாட்டில் மிகவும் மோசமான முறையில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறான சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருப்பதற்கு மக்கள் கட்டாயம் சுகாதார வழிமுறைகளை பின்பற்றுதல் அவசியம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தற்போது வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு வருவோரில் கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.