நீண்ட நாள் திட்டம்..திருட வந்த இடத்தில் திருடனுக்கு நடந்த சோகம்…! இப்படி ஒரு நிகழ்வை எங்கேயும் பார்த்ததில்லை…

இந்தியா..

இந்தியாவில் உள்ள ஆந்திர மாநிலம் லக்கவரம் கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீநிவாஸ் ரெட்டி என்பவர், பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவர் தினமும் இரவில் வந்து வருமான பணத்தை எண்ணி வைப்பது நடைமுறையில் இருந்துள்ளது. இதை ஒரு திருடன் கண்காணித்துக் கொண்டே இருந்திருக்கிறான்.

அந்த திருடன் சரியான நேரம் பார்த்து சம்பவ தினம் அன்று சீனிவாஸ் ரெட்டியின் வீட்டிற்குள் நுழைந்து அவர் உறங்கிக் கொண்டிருந்த நேரம் பார்த்து அவரின் படுக்கை அறையில் இருந்த கட்டிலுக்கு கீழே சென்று படுத்துக் கொண்டான். அவர் தூங்கியதும் பணத்தை எடுத்துச் செல்வது தான் அவனின் திட்டமாக இருந்தது.

இந்த நிலையில் வழமை போன்று கட்டிலுக்கு மேலே உட்கார்ந்து சீனிவாஸ் பணத்தை எண்ணிக் கொண்டே இருக்கிறார். அவர் என்னும் பணம் அனைத்தும் தனக்கே சேரப்போகிறது என்று கனவோடு கட்டிலுக்கு அடியில் அமர்ந்து கணக்குப் போட்டுக் கொண்டிருந்தான் அந்த திருடன்.

அன்றைய தினம் கணக்கு வழக்குகளை சரி பார்த்து பணத்தை எண்ணி வைக்க ஸ்ரீனிவாஸிற்கு நீண்ட நேரம் ஆனதால், அந்த திருடன் அசதியில் உறங்கி போய்விட்டான். திடீரென்று கட்டிலுக்கு அடியில் இருந்து குறட்டை சத்தம் கேட்கவே அதிர்ச்சி அடைந்த அந்த பைனான்சியர் மெல்ல கட்டிலை விட்டு இறங்கி அறைக்கு வெளியே சென்று அந்த அறையை தாழ்ப்பாள் போட்டுவிட்டு காவல்துறையினருக்கு தகவல் அறிவித்துள்ளார்.

இதனை அடுத்து காவல்துறையினர் வந்து கட்டிலுக்கு அடியில் தூங்கி கொண்டிருந்த திருடனை எழுப்ப அவன் திருதிரு என்று விழிக்க அவனை கைது செய்துள்ளனர். இப்போது சிறையில் தூங்கிக் கொண்டிருக்கிறான்.