இம் முறை ஐ பி எல் தொடரில் விராட் கோலியின் மோசமான சாதனை… மன உளைச்சலால் எடுத்த முடிவு..!

விராட் கோலி…

ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி அவரது பேட்டிங் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. எனவே, அவர் கடும் மன உளைச்சலில் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் ஐபிஎல் தொடரில் மூத்த வீரர்கள் பலரும் இம் முறை சரியாக ஆடவில்லை. இதில், தோனி ரோகித் சர்மா, பாண்டியா ஆகியோரும் அடங்குவர் என விமர்சிக்கப்படுகின்றது.

அவர்களுள் இந்திய அணியின் கேப்டனான கோலி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார். இந்த ஐபிஎல் தொடர் கேப்டன் கோலிக்கு கெட்ட கனவாகவே இருக்கின்றது. ஆர்சிபி அணி வெற்றி பெற்றாலும்கூட கோலி பேட்டிங்கை சொதப்பி வருகிறார். இதுவரை வெறும் 25 ரன்களை மட்டுமே எடுத்து மோசமான சாதனையை படைத்துள்ளார்.

இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கோலியின் மோசமான பேட்டிங் கையாடல் காரணமாக கடுமையான விமர்சனங்கள் அவர் மீது வைக்கப்படுகிறது. இனி கோலியை நம்பி இருக்கக் கூடாது என்று விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இதன் காரணமாக கடும் கோபத்திலும், மன உளைச்சலிலும் அவர் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது ஈகோவை சீண்டும் அளவுக்கு விமர்சனங்கள் வைக்கப்பட்ட காரணத்தால், இரவு நேரத்தில் கிரிக்கெட் பயிற்சியில் அவர் ஈடுபட்டுள்ளாராம். சக வீரர்கள் அனைவரும் சென்ற பின்னும் கூட கோலி பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றார். அதிகாலை வரை அவர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.

தன்னுடைய வீக்னஸ் என்ன என்பதை தெரிந்து அந்த ஷாட்களை மீண்டும் மீண்டும் அவர் ஆடியிருக்கிறார். முக்கியமாக ஸ்பின் பவுலிங் போட சொல்லி அதனை எதிர்கொண்டு இருக்கின்றார். கேட்ச் பிடிக்காத வகையில் ஆடுவதுபோல பயிற்சிகளை மேற்கொண்டு இருக்கின்றார். அவர் பயிற்சி அதிகாலை வரை தொடர்ந்து இருக்கின்றது. 

எனவே, அடுத்த போட்டியில் கோலியின் ஆக்ரோஷத்தை காண முடியும் என்று தெரிவித்துள்ளனர்.