உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை…தொடர்ந்தும் கட்டுநாயக்க விமான நிலையத்தை மூட தீர்மானம்..!

கட்டுநாயக்க விமான நிலையத்தை திறப்பது தொடர்பில் வெளியான தகவல்..

உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கினங் எதிர்வரும் 2021ஆம் ஆண்டு கட்டுநாயக்கக விமான நிலையம் மீண்டும் திறக்கப்படவுள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தகவல் வெளியிட்டார்.

அதன்படி எதிர்வரும் 2021 முதற்பகுதியில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வழமை போன்று விமான பயணங்களுக்காக திறப்பதற்கு எதிர்பார்ப்பதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தநிலையில் டிசம்பர் மாதம் ஏற்படவுள்ள குளிரான காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகள் உட்பட பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவல் தீவிரமடைய கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனை கருத்தில் கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் நடவடிக்கையை பிற்போட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவலின் போது இவ்வாறு விமான நிலையங்களை திறந்த பல நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் உயர்வடைந்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.