பிக் பாஸ் சீஸன் 4….
உலக நாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியானது தற்போது நான்காவது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது. கடந்த 3 சீஸனும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்ற நிலையில், பலர் இதன் மூலமாக மக்களிடம் பிரபலமானார்கள்.
இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சி நான்காவது வருடத்தை ஆரம்பித்துள்ளது. இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்தே மக்கள் நீதி மையத்தின் கொள்கைகளை பரப்ப இருப்பதாக ஏற்கனவே அக்கட்சியின் தொண்டர்கள் தகவல் தெரிவித்து இருந்தனர்.
மேலும் இந்த நிலையில், கொரோனா பரவல் காரணாமாக இந்நிகழ்ச்சியை ஆரம்பிப்பது தாமதம் ஏற்பட்டு இருந்தாலும், இப்போது அதற்கான பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த நான்காவது சீசனில் யார் யார் கலந்துகொள்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் .
அதற்கமைய, நடிகை க்ஷணம் செட்டி, ரேகா, ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், கேப்ரியல்லா, அறந்தாங்கி நிஷா, ஆர்.ஜே. அர்ச்சனா, செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத் ஆகிய பெண் போட்டியாளர்களும், நடிகர்கள் ஜித்தன் ரமேஷ், ஆரி, ரியோ, பாடகர் அஜீஸ், மாடல் பாலாஜி முருகதாஸ் ஆகிய ஆண் போட்டியாளர்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஆனால், அதிகாரபூர்வ தகவல் 4 ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.