ஹட்டன் – டயகம வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்து…
இன்று காலை ஹட்டன் – டயகம வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் பேருந்தில் இருந்த 49 பேர் படு காயமடைந்துள்ளனர்.
இன்று தனியார் பேருந்து ஒன்று ஹட்டன் – டயகம வீதியியை விட்டு விலகி 20 அடி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன் போது பேருந்தில் பயணித்த 49 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களில் 24 பாடசாலை மாணவர்களும் உள் அடங்குகின்றனர் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் இவ்விபத்தில் காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.