இலங்கையை விடாமல் துறத்தும் கொரோனா! நேற்று 309 நோயாளர்கள்!

கொரோனா

இலங்கையில் நேற்று இரவு 259 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நேற்று மாத்திரம் நாட்டில் 309 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

பெலியகொட மீன் சந்தை பகுதியில் 188 பேருக்கும், தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் உள்ள 02 பேருக்கும், கட்டுநாயக்க பகுதியில் 22 பேருக்கும்,  மினுவங்கொடை தொற்றாளருடன் நெருங்கிய தொடர்பை பேணிய 97 பேருக்கும் இவ்வாறு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மினுவங்கொடை கொத்தணியின் மொத்த எண்ணிக்கை 2,718 ஆக உயர்ந்துள்ளது.

இதனையடுத்து நட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,287 ஆக உயர்வடைந்துள்ளதுடன்  2,712 தொற்றாளர்கள் தற்போது நாடு முழுவதும் உள்ள 23 கொரோனா தொற்றுக்கான வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அத்துடன் நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்குள்ளா 3,561 பேர் குணமடைந்தும் 14 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.