கொரோனா நோயாளி
வைத்தியசாலையில் இருந்து கொரோனா நோயாளி ஒருவர் தப்பி சென்றுள்ளார்.
கொரோனா நோய் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்ற இளைஞன் ஒருவர் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கொஸ்கம பிரதேசத்தில் அமைந்துள்ள கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞனே இவ்வாறு தப்பி சென்றுள்ளார்.
இன்று காலை 6 மணியளவில் குறித்த இளைஞன் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
கொரோனா பரவலை தடுக்கும் தேசிய செயற்பாடு நிலையம் இதனை தெரிவித்துள்ளது.
குறித்த இளைஞன் இன்று அதிகாலை 1.30 மணியளவிலேயே வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளார்.
அவர் 26 வயதுடைய சீத்தாவத்தை, புதிய களனி வீதி பிரதேசத்தை சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவரது புகைப்படம் ஒன்றும் ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது.