முல்லைநியூஸ் செய்திகளுக்காக Theivendran Thiruneepan
முல்லை. முள்ளியவளை ஆலடிச் சந்தியில் ஓடிக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்தமையால் இளைஞர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று (25-10-2020) மாலை இடம்பெற்றுள்ளது.
இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளிலில் இன்று மாலை தனது வீடு நோக்கி சென்று கொண்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது.
இதனையடுத்து அப்பகுதியால் சென்றவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதும் தீ தொடர்ச்சியாக எரிந்ததில் இளைஞர் உடல்கருகி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த நபர் 2ஆம் வட்டாரம் முள்ளியவளையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையாகிய 21 வயதுடைய மகேந்திரன் கவிஞ்ஞன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிள் திடீரென தீப்பற்றியமைக்கான காரணம் தெரியவில்லை.
சம்பவ இடத்திற்குச் சென்ற முள்ளியவளை பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.