இன்றைய ராசிபலன்: 23.11.2020: கார்த்திகை மாதம் 8ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று

சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 8ம் தேதி, ரபியுல் ஆகிர் 7ம் தேதி, 23.11.2020, திங்கட்கிழமை, வளர்பிறை, நவமி திதி, அதிகாலை 4:23 வரை, அதன்பின் தசமி திதி, சதயம் நட்சத்திரம் மாலை 5:32 வரை, அதன்பின் பூரட்டாதி நட்சத்திரம், சித்த – மரணயோகம்.

நல்ல நேரம் : காலை 6.00 மணி முதல் காலை 7.30 மணி வரை. ராகு காலம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. எமகண்டம் : காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை. குளிகை : பிற்பகல் 1.30 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. சூலம் : கிழக்கு

பரிகாரம் : தயிர் சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம் பொது : சாய்பாபா பிறந்தநாள், வாஸ்து நாள், பூஜை நேரம் காலை 11:29 – 12:05 மணி

மேஷம்: அசுவினி: பலகாலம் மனதை அரித்துக் கொண்டிருந்த கவலை நீங்கும். பரணி: வெளிநாட்டில் உள்ள பிள்ளைகளிடம் இருந்து நற்செய்தி வரும். கார்த்திகை 1: வாக்குறுதியைக் காப்பாற்றி நிம்மதி அடைவீர்கள். பயம் தீரும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: வாழ்வில் முன்னேறுவதற்கான முயற்சிகளில் கவனம் செலுத்துவீர்கள். ரோகிணி: உங்களின் பலகாலப் பொறுமைக்கு இன்று பெருமை கிடைக்கும் மிருகசீரிடம் 1,2: வியாபாரம் சூடுபிடிக்கும். பெண்களின் கவலை தீரும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: சேமிப்பு உயரும். புதிய திட்டங்கள் அனைத்தும் நிறைவேறும். திருவாதிரை: உயர் கல்வி அல்லது பணிநிலை குறித்து யோசிப்பீர்கள். புனர்பூசம் 1,2,3: முன்பு உதவிய சிலரைச் சந்தித்து மகிழ்ச்சி அடைவீர்கள்.

கடகம்: புனர்பூசம் 4: மற்றவர் தலையீட்டால் ஏற்பட்ட பிரச்னைகள் அகலும் நாள். பூசம்: அக்கறை எடுத்துக் கொண்டவர்களிடமிருந்து வீண் பழிகள் ஏற்படும் ஆயில்யம்: வம்பில் மாட்டும் செயல் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

சிம்மம்: மகம்: செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். கனவு நனவாகும் பூரம்: தவறுகளைத் திருத்திக் கொள்வது பற்றிய சிந்தனை மேலோங்கும். உத்திரம் 1: கடன் சுமை குறைவதற்கு நீங்கள் எதிர்பாராதவர்கள் உதவுவர்.

கன்னி: உத்திரம் 2,3,4: வெளியூரிலிருந்து நல்ல தகவல் வரலாம். சிக்கல் நீங்கும். அஸ்தம்: நெருங்கிய நண்பர்களிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சித்திரை 1,2: வளர்ச்சி அதிகரிக்கும். முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

துலாம்: சித்திரை 3,4: வருங்கால நலன் பற்றிய முயற்சியில் வெற்றி கிடைக்கும். சுவாதி: நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாதத்தைத் தீர்த்து வைப்பீர்கள். விசாகம் 1,2,3: பயணத்தின்போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

விருச்சிகம்: விசாகம் 4: பணத்தேவை நிறைவேறும். உடன்பிறந்தோருக்கு உதவுவீர்கள். அனுஷம்: கணவர் பாராட்டுவார். குழந்தைகள் பற்றிய பிரச்னைகள் தீரும். கேட்டை: நண்பர்கள் மூலமாகப் புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தனுசு: மூலம்: மனச்சுமை குறையும் நாள். உறவை ஒட்டுவதில் ஆர்வம் கூடும். பூராடம்: நவீன பொருட்கள் வாங்குவதில் அதிகச் செலவு செய்யாதீர்கள். உத்திராடம் 1: புதியவரின் அறிமுகம் கிடைக்கும். நிலுவைப் பணிகளை முடிப்பீர்கள்.

மகரம்: உத்திராடம் 2,3,4: ஜாமீன் போட்ட தொகை திருப்பப்படுவதால் நிம்மதி ஏற்படும். திருவோணம்: பிள்ளைகளால் மனம் மகிழும் நிகழ்ச்சிகள் நடைபெறும் அவிட்டம் 1,2: பெற்றோருக்கு ஏற்பட்ட மனச்சுமை உங்ககளால் குறையும்

கும்பம்: அவிட்டம் 3,4: சொத்து சம்பந்தமான வழக்கு விஷயங்கள் தள்ளிப்போகும் சதயம்: புதிய விஷயங்களில் ஆர்வம் செலுத்தி கற்றுக் கொள்வீர்கள். பூரட்டாதி 1,2,3: பகைவர் மனம் மாறுவார். மனதில் மகிழ்ச்சி கூடும்.

மீனம்: பூரட்டாதி 4: பங்குச் சந்தையில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம், உத்திரட்டாதி: வாழ்க்கைத் துணையின் சகோதரர் மூலம் உதவி கிடைக்கும். ரேவதி: தாய்வழி உறவினரிடமிருந்து நல்ல செய்தி ஒன்று வரும்.