இன்றைய ராசிபலன்: 24.11.2020: கார்த்திகை மாதம் 9ம் தேதி: இன்று உங்கள் ராசிக்கு என்ன பலன்!

இன்று

சார்வரி வருடம், கார்த்திகை மாதம் 9ம் தேதி, ரபியுல் ஆகிர் 8ம் தேதி, 24.11.2020, செவ்வாய்க்கிழமை, வளர்பிறை, தசமி திதி, அதிகாலை 5:49 வரை, அதன்பின் ஏகாதசி திதி, பூரட்டாதி நட்சத்திரம் இரவு 7:19 வரை, அதன்பின் உத்திரட்டாதி நட்சத்திரம், மரண – அமிர்தயோகம்.

நல்ல நேரம் : காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை. ராகு காலம் : பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை. எமகண்டம் : காலை 9.00 மணி முதல் காலை 10.30 மணி வரை. குளிகை : பிற்பகல் 12.00 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை. சூலம் : வடக்கு

பரிகாரம் : பால் சந்திராஷ்டமம் : ஆயில்யம், மகம் பொது : முருகன் வழிபாடு.

மேஷம்: அசுவினி: முன்னேற்றம் கூடும் நாள். கவனமாகப் பேசினாலும் சிரமம்தான். பரணி: குடும்பத்தில் உங்களால் வாக்குவாதம் வராமல் கவனமாக இருங்கள். கார்த்திகை 1: பணியாளர்களுக்கு வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

ரிஷபம்: கார்த்திகை 2,3,4: அலுவலகப் பணிகளில் எதிர்பாராத ஒரு வேலை முடியும். ரோகிணி: மனதில் இருந்துவந்த சலிப்பு அகலும். கலகலப்பான சூழல் உண்டு. மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் சிறிது லாபமடைவீர்கள். புகழ் அதிகரிக்கும்.

மிதுனம் : மிருகசீரிடம் 3,4: சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிரிகளை வெல்வீர்கள். திருவாதிரை: உங்களுக்குக் கீழ்ப்பணிபுரிபவர்கள் பொறுமையாக இருப்பார்கள். புனர்பூசம் 1,2,3: உழைப்பால் உயரும் நாள். உடல்நலம் மேம்படும்.

கடகம்: புனர்பூசம் 4: சாப்பிடவும், தூங்கவும் நேரமின்றி உழைக்க வேண்டி வரும். பூசம்: பிரியமானவர்களோடு இத்தனை நாள் இருந்த பிரச்னைகள் அகலும். ஆயில்யம்: எதிர்பார்த்தவை நடக்காததால் விரக்தி அடையும் நிலை ஏற்படும்.

சிம்மம்: மகம்: எதைத் தொட்டாலும் பிரச்னையில் முடிகிறதே என்று புலம்புவீர்கள். பூரம்: குடும்பத்தில் இருந்து வந்த பெரிய பணத்தேவைகள் பூர்த்தியாகும். உத்திரம் 1: உங்கள் குணாதிசயத்தால் ஏற்பட்டிருந்த தொல்லைகள் நீங்கும்.

கன்னி: உத்திரம் 2,3,4: உறவினர்கள் வீட்டு சுபநிகழ்ச்சி பற்றிய செய்தி வரும். அஸ்தம்: மற்றவர்கள் பிரச்னையில் தலையிட்டு அதைச் சரிசெய்வீர்கள். சித்திரை 1,2: அக்கம்பக்கத்தில் நிகழும் குதுாகல சம்பவம் மகிழ்ச்சி தரும்.

துலாம்: சித்திரை 3,4: பெண்களின் நீண்ட நாளைய எண்ணமொன்று நிறைவேறும். சுவாதி: நீதி கிடைக்காது என்று நினைத்த விஷயத்தில் நலம் ஏற்படும். விசாகம் 1,2,3: உயர்ந்த நிலையை அடைவதற்கான சந்தர்ப்பம் கைகூடிவரும்

விருச்சிகம்: விசாகம் 4: மாற்றுக்கருத்துடையோர் மனம் மாறி சமாதானம் அடைவார்கள். அனுஷம்: சிறு உடல்நலப் பிரச்னை ஏற்பட்டு சரியாகும். கவலைகள் குறையும். கேட்டை: அலைச்சல் ஏற்பட்டாலும் ஆதாயமும் ஏற்படும். பயம் நீங்கும்.

தனுசு: மூலம்: சான்றோர்களின் எதிர்பாராத சந்திப்பால் சந்தோஷம் அடைவீர்கள். பூராடம்: திட்டமிட்ட விஷயம் ஒன்றில் திடீர் மாற்றங்களைச் செய்வீர்கள். உத்திராடம் 1: சில உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்

மகரம்: உத்திராடம் 2,3,4: தேவையற்ற வாக்குவாதங்களில் மூக்கை நுழைக்காதீர்கள். திருவோணம்: பொதுவாழ்வில் புகழ் கூடும். குடும்பத்தில் இயல்பு திரும்பும். அவிட்டம் 1,2: மகிழ்ச்சி கூடும். முதலீடுகளை நன்கு ஆராய்ந்து செய்யவும்.

கும்பம்: அவிட்டம் 3,4: நண்பர்களிடம் விட்டுக்கொடுத்து போவதால் மகிழ்ச்சி ஏற்படும். சதயம்: பிறரால் பாராட்டப் பெறுவீர்கள். பொறாமைப்படுவதை தள்ளிவையுங்கள். பூரட்டாதி 1,2,3: மற்றவர்களின் விமர்சனத்தைப் புறந்தள்ளி முன்னேறுவீர்கள்.

மீனம்: பூரட்டாதி 4: கரைந்த சேமிப்பை ஈடுகட்டுவீர்கள். கட்டிடப்பணி தொடரும். உத்திரட்டாதி: முன்னேற வேண்டும் என்று தோன்றும். நிதி நிலை உயரும். ரேவதி: கோபம் குறையும். பிள்ளைகள் பற்றிய எதிர்பார்த்த நற்செய்தி வரும்.