தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

தங்க விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

இதுவரையில் தங்கம் அவுன்ஸின் விலை 1873.31 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கடந்த 19ஆம் திகதி தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1860.37 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

அதற்கமைய கடந்த 4 நான்கு நாட்களுக்குள் தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 13 டொலரினால் அதிகரித்துள்ளது.

எனினும் நவம்பர் மாதம் 9 ஆம் திகதி தங்கம் ஒரு அவுன்ஸின் விலை 1960.93 டொலராக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.