புற்றுநோயால் அவதிப்பட்ட நடிகர் தவசி உயிரிழப்பு.! ரசிகர்கள் சோகம்.!

நடிகர் தவசி

திரைப்படத்தை பொறுத்த வரையில் நடித்து வரும் பெரும்பாலான நடிகர்களின் உண்மையான வாழ்க்கை பலருக்கும் தெரிவதில்லை. இன்றளவில் உள்ள இணையத்தகவல் தொழில்நுட்பம் மூலமாக பல நடிகர்களின் உண்மையான வாழ்க்கையின் மறுபக்கம் நமக்கு தெரிய துவங்கியுள்ளது.

அந்த வகையில், திரைத்துறையை சார்ந்த பிரபல வில்லன் நடிகர் பொன்னம்பலம் கூட, மருத்துவமனையில் சிரமப்பட்டதும், அவரின் மருத்துவ செலவுகளையும், அவரது குழந்தைகளின் எதிர்காலத்தையும் நடிகர் கமல் ஹாசன் பார்த்துக்கொள்வதாக தெரிவித்தது நாம் அறிந்த ஒன்று.

நடிகர் தவசி பல படங்களில் நடித்திருந்தாலும், வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்தில் ” கருப்பன் குசும்புக்காரன் ” என்ற வசனத்தின் மூலமாக பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகி, இணைய நெட்டிசன்களிடம் மீம் டெம்ப்லேட் ஆக மாறியவர் நடிகர் தவசி.

இவர் தற்போது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அடையாளமே தெரியாத அளவு மாறியிருக்கும் சோக புகைப்படம் வைரலாகி வருந்தது. மேலும், மருத்துவ செலவுகளுக்கு யாரேனும் உதவி செய்யுங்கள் என்று குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை வைத்ததை தொடர்ந்து அவருக்கு திரைபிரலங்கள் பலரும் உதவி செய்ய முன்வந்தனர்.

இந்த நிலையில், அவர் தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.