சடலத்தை கட்டியணைத்து அழுத இருவருக்கு கொரோனா தொற்று!

கொரோனா தொற்று!

கொலன்னனாவ, சிங்கபுர பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவர் வீட்டில் உயிரிழந்துள்ளார்.

55 வயதுடைய குறித்த நபர் உயிரிழந்த பின்னர் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனையில் அவர் கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதியாகியுள்ளது.

அவரது சடலத்தை கட்டியணைத்து அழுத இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் மரண வீட்டிற்கு சென்ற மூன்று பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மரண வீட்டிற்கு சென்ற அனைவரையும் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.