பிரபல இந்திய நடிகர் காலமானார்.!

பிரபல நடிகர் காலமானார்.!

இந்திய பிரபல நடிகர் ரவி பட்வர்தன் காலமானார்.தூர்தர்ஷன் சேனலில் முன்பு வெளியான மகாபாரத தொடரில் திருதராஷ்டிரனாக நடித்தவர் ரவி பட்வர்தன். இவர் குடும்பத்தினருடன் தானேயில் வசித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது குடும்பத்தினர் அவரை ஜூபிடர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இந்நிலையில்,அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார்.

இதைப்பற்றி நடிகர் ரவி பட்வர்தனின் மகன் நிரஞ்சன் தெரிவித்ததாவது, தனது தந்தைக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. மேலும் அவருக்கு மூச்சுத்திணறல் பிரச்சனையும் இருந்தது. எனவே அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட்டது. நாங்கள் அவரை இழந்து விட்டோம் எனக் கவலை வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரவி பட்வர்தன் இதுவரை 200க்கும் மேற்பட்ட மராத்தி, இந்திய படங்களில் நடித்துள்ளார். மேலும் மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார். ரவி பட்வர்தனின் மறைவுக்கு திரைத்துறையினர், முதலமைச்சர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.